-
புதுமடம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையின் சார்பாக முஸ்லீம் அல்லாத மாற்று மத சகோதரர்களுக்கான இஸ்லாத்தின் பால...
-
நமது கிளையில் பழைய நிர்வாகம் முற்றிலுமாக நீக்கப்பட்டு புதிய நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்
-
இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா !!! இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவ...
-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக 13-11-11 ஞாயிற்று கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது....
-
சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளையும் இருமேனியும் கிளையும் இணைந்து மாபெரும் இரத்த தானம் முகாம் நடை பெற்றது...
TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
இமயம் டிவியில்..
இந்தியா 10.30 P.M - 11.00 P.M
சவூதி அரேபியா 8.00 P.M – 8.30 P.M
யூ.ஏ.இ. 9.00 P.M – 9.30 P.M
- வெள்ளிமேடை பயான்கள்!
- மாநாட்டு உரைகள்
- இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி
- இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகும்
Downlink details for Imayam TV
in Gulf: Satelite : INSAT 2E Frequency : 3845 Symbole Rate: 26043 FEC : 3/4 Vertical
in India: Statelite – Thaicom 5 Downlink Frequency – 3991 Symbol Rate – 13330 FEC – 3/4 Polarization – Vertical
25-Jan-2012
ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்
ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்
தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.1
மவ்லித் வரிகள்
اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !
اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ
இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ
كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)
2
மவ்லித் வரிகள்
يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ
பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!
புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)
3
மவ்லித் வரிகள்
حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ
தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.
தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!
அவர் இழப்பினை அடையவில்லை.
குர்ஆன் வரிகள்
அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)
4
மவ்லித் வரிகள்
اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ
நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து
என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின்
குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.குர்ஆன் வரிகள்
நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)
5
மவ்லித் வரிகள்
اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ
அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.குர்ஆன் வரிகள்
“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)
6
மவ்லித் வரிகள்
صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ
வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.குர்ஆன் வரிகள்
“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)
7
மவ்லித் வரிகள்
اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ
எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.குர்ஆன் வரிகள்
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)
8
மவ்லித் வரிகள்
اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்குர்ஆன் வரிகள்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)
8
மவ்லித் வரிகள்
ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ
எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின்
இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை
முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும்,
பொருத்தத்தை தேடுகிறேன்.குர்ஆன் வரிகள்
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)
9
மவ்லித் வரிகள்
فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ
எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.குர்ஆன் வரிகள்
“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)
10
மவ்லித் வரிகள்
قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.குர்ஆன் வரிகள்
“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)
11
மவ்லித் வரிகள்
بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.குர்ஆன் வரிகள்
“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)
நபி மொழி
நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)
12
மவ்லித் வரிகள்
وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا
கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)
13
மவ்லித் வரிகள்
وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ
என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)
14
மவ்லித் வரிகள்
إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.குர்ஆன் வரிகள்
தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)
மவ்லித் வரிகள் நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.
நபி மொழிகள்
அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)
சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)
15
மவ்லித் வரிகள்
اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ
எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ
நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.குர்ஆன் வரிகள்
நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)
நபி மொழி
மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)
16
மவ்லித் வரிகள்
مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ
மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின்
பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி
செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.குர்ஆன் வரிகள்
“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)
17
மவ்லித் வரிகள்
اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ
நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து
போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே!
தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும்,
கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த
மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை
அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக்
குளிரச் செய்யுங்கள்.குர்ஆன் வரிகள்
யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16
இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா !!!
இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா !!!
இஸ்லாம்
என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது
நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. வல்ல அல்லாஹ்
தன் திருமறையில்
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்காக வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.(அல்குர்ஆன்: 5:3)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். (இர்பான் பின் ஸாரியா(ரலி) அஹ்மத் 16519)
இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்து விட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத்களை உருவாக்கி வைத்துள்ளனர்.
ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர். நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாட வேண்டும். அவர்களின் மீது கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.
இந்த மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையால் மதி மயங்கியவர்களாக கேடு கெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோஷமிடுவது, தெருவாரியாக வசூல் செய்து மௌலூது, பாத்திஹா ஒதி நேர்ச்சை விநியோகிப்பது, அன்றைய தினம் இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி நடத்துவது இன்னும் பற்பல அனாச்சாரங்களை ஊருக்கு ஊர் வித்தியாசமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும் அக்காரியத்திற்கு உரைக்கல்லாக அவன் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போது தான் அந்த செயலுக்கு நன்மை கிடைக்கும். இல்லையேல் அது தீமையாகவே அமைந்து விடும்.
இவர்கள் கொண்டாடும் இந்த மீலாது விழாவுக்கு மார்க்க அங்கீகாரம் உள்ளதா என்றால் இல்லவே இல்லை. குர்ஆன், நபி(ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களின் வரலாற்றை சொல்லிகாட்டும் போது யாருடைய பிறந்த நாளைப் பற்றியும் கூறவேயில்லை. அதிசயமாகப் பிறந்தவர் என்ற அடிப்படையில் நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றிக் கூறும்போது
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது நிம்மதி இருக்கிறது (என்றார்) (அல்குர்ஆன்: 19:33)
என்று வல்ல அல்லாஹ் கூறுகின்றான். அதிலும் பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா எடுக்க சொல்லவில்லையே. அதைப்போன்று நபி(ஸல்) அவர்கள், முன் சென்ற நபிமார்கள் ஆதம், நூஹ், இப்ராஹிம் (அலை) மற்றும் பல நபிமார்களின் வரலாற்றைக் கூறும்போது அவரவர் பிறந்த நாளைப்பற்றியும் அவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறவே இல்லை.அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடி நமக்கு முன்மாதிரி காட்டிடவும் இல்லை.
நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் தன் பிறந்த நாளையோ, தன் பிள்ளைகளின் பிறந்த நாளையோ தாமும் கொண்டாடியதில்லை. பிறரைக் கொண்டாடும்படி கூறவும் இல்லை. மேலும், நபி(ஸல்) அவர்களை எல்லா அம்சங்களிலும் நூற்றுக்கு நூறு பின்பற்றி வந்த நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களா? என்றால் அதுவுமில்லை. அதற்காக விழா கொண்டாடவும் இல்லை. மாறாக, ஆண்டுக்கணக்கை எதிலிருந்து துவங்கலாம் என்ற ஆலோசனை நடத்தும்போது நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத் துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே துவக்கியுள்ளதை வரலாற்றில் காண முடிகிறது.
உலகத்திலுள்ள எத்தனையோ பேருக்கு பிறந்த நாள் கொண்டாடும்போது, அகில உலக மக்களுக்கோர் அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடினால் என்ன? என்ற வாதத்தை சிலர் முன் வைக்கின்றனர். இது பற்றி சற்று விரிவாகக் காண்போம்.
நபி(ஸல்) அவர்கள் அகிலத்திற்கோர் அருட் கொடையாக வல்லநாயன் அல்லாஹ் அருள் செய்திருக்கிறான். அந்த அருட்கொடையான நபி(ஸல்) அவர்கள் தமது சொல், செயல் வாழ்க்கை முறைகளால் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் தனிப்பெரும் அத்தாட்சியாக தனித்து விளங்குகிறார்கள்.நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர்களது வாழ்வும் வழிகாட்டலும் இன்றளவும் இருக்கிறது. உலகம் உள்ளளவும் இறைகிருபையால் ஜீவன்மிக்கதாக இருக்கும்.
அப்படிப்பட்ட மாமனிதர் அவர்கள்
ஏதோ ஒரு சில தினங்கள் மட்டும் புகழ்பாடுகிறோம் எனும் பெயரில் நினைவுக்
கூறப்படக் கூடியவரல்லர். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஆண் பெண் என
ஒவ்வொருவரும் தங்கள் உள்ளங்களாலும் செயல்களாலும் நினைவுக் கூறப்பட
வேண்டியவர்கள் நபி(ஸல்) அவர்கள். அந்தளவுக்கு மகத்தான ஒரு மனிதரின்
பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று கூறி அவர்கள் காட்டித் தராத ஒரு
வழிமுறையைக் கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாகுமா? அல்லது
அலட்சியப்படுத்துவதாகுமா? விழாக் கொண்டாட்டம் என்பதே ஒரு கொள்கையின், ஒரு
நல்ல மனிதரின் உண்மையான தன்மையையும், சிறப்பையும் மறக்கடிக்கச் செய்து
விட்டு, வீணான செயல்களையும், வீணான சிந்தனைகளையும் மேலோங்கச் செய்து
விடும். அதனால் தான் இஸ்லாம் இந்த விழாக் கொண்டாட்டங்களுக்கு
முக்கியத்துவம் தருவதேயில்லை.
கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய வல்ல அல்லாஹ் தன் திருமறையில்நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீஙகள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!( அல்குர்ஆன்: 3: 31-32)
இந்தக் குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் அழகிய முன்மாதிரி உள்ளது. ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிப்பது உண்மையாக இருந்தால் அவன் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். இதுவே இறைநேசத்தின் சத்தும், சாரமும் அடையாளமும் குறிக்கோளுமாகும்.
மாறாக, நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாமல் நல்லது தானே, சிறப்புதானே என்று நாமே நம் இஷ்டத்திற்கு உருவாக்கும் எல்லாச் செயல்களும் பித்அத்தான நூதன வழிகேடு என்றும் அதுவே நரகத்திற்கு கொண்டு சேர்க்கும் செயலென்று அல்லாஹ்வும், அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் கண்டித்துள்ளதை காணலாம். அந்த அடிப்படையில் மௌலூது,மீலாதுவிழா போன்ற நிகழ்ச்சிகள்நடத்துவது அழகிய மார்க்கத்தில் புதிதாக சேர்த்த வழிமுறையாகும்.
வல்ல அல்லாஹ் தன் திருமறையில் இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதை விட்டு விலகி கொள்ளுங்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(அல்குர்ஆன்: 59:7)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.(33:36)
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!(ஆயிஷா(ரலி) புகாரி 2697)
நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் (ஆயிஷா (ரலி) முஸ்லிம் 3243)
அனைத்து பித்அத்தான செயல்களுக்கும் சாட்டையடியாக அமைந்த மாநபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை இவைகள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் கெட்டது புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவானவை அனைத்தும் பித்அத்களாகும்.ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். (ஜாபிர் (ரலி) நஸயி 1560)
என் உம்மத்தினர் அனைவரும் சுவர்க்கத்தில் நுழைவர். விலகிக்கொண்டவனைத் தவிர!. அப்போது நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! விலகிக் கொண்டவன் யார்? என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எனக்கு யார் வழிப்பட்டானோ அவன் சுவர்க்கம் செல்வான். யார் எனக்கு மாறு செய்தானோ அவன் விலகிக் கொண்டவன் ஆவான் என பகர்ந்தார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி)
அல்லாஹ்வின் தூதரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ. துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும். (அல்குர்ஆன் 24: 63)
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதிஸ்களின் மூலம் அல்லாஹ்வும், அவனது தூதரும் கட்டளையிடாத எந்தவொரு செயலுக்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பது தெளிவாக நமக்கு எடுத்துரைக்கையில் பிறந்த நாள் விழா போன்ற கொண்டாட்டங்கள் அனைத்தும் மார்க்கத்தில் புதிதாக திணிக்கப்பட்ட யூத, கிருஸ்தவ நடைமுறை செயல்கள் என்பதை புரிந்துக் கொண்டு குர்ஆன் மற்றும் நபிவழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும்.
உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை,அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக மாட்டார். (அனஸ்(ரலி) புகாரி 15)
இதன் மூலம் உண்மையான நேசம் என்பது நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதற்கு அடையாளம் அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி தாமும் நடந்து, அதை மற்றவர்களுக்கும் எடுத்து போதிப்பதாகும்.
எனவே நபி(ஸல்) அவர்களை ஒரு சில நாட்கள் மட்டும் எண்ணிப் பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை நெறியாகப் பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக! இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெற இதுவே சிறந்த வழி.
15-Dec-2011
புதுமடத்தில் கிரகணத் தொழுகை...
ஏக இறைவனின் திருப்பெயரால்...
10.12.2011 இரவு 7.30 மணிமுதல் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதனையடுத்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக மைக்கில் தொழுகை
அறிவிப்பு விடப்பட்டது. கனிசமான நபர்கள் அந்த அறிவிப்பை கேட்டு
தொழவந்தனர். சரியாக இரவு 8 மணியளவில் கிரகணத் தொழுகை நடைபெற்றது.
(அல்ஹம்துலில்லாஹ்)
10.12.2011 இரவு 7.30 மணிமுதல் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதனையடுத்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக மைக்கில் தொழுகை
அறிவிப்பு விடப்பட்டது. கனிசமான நபர்கள் அந்த அறிவிப்பை கேட்டு
தொழவந்தனர். சரியாக இரவு 8 மணியளவில் கிரகணத் தொழுகை நடைபெற்றது.
(அல்ஹம்துலில்லாஹ்)
08-Dec-2011
புதுமடத்தில் நடந்த உள்ளரங்கு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக (07.12.2011) மஹ்ரிப்
தொழுகைக்கு பிறகு உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "தொழுகையின்
முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
சகோதரர். ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் மதரஸா மாணவர்கள் உட்பட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
07-Dec-2011
உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி...
ஏக இறைவனின் திருப்பெயரால்..
இன்ஷா அல்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக இன்று (07.12.2011) மாலை மஹ்ரிப்
தொழுகைக்கு பிறகு உள்ளரங்கு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
உரை : ரில்வான் (மாநில பேச்சாளர்)
தலைப்பு : தொழுகையின் முக்கியத்துவம்!
இடம் : தவ்ஹீத் மர்கஸ், புதுமடம்.
அனைவரையும் அழைக்கிறது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - புதுமடம் கிளை.
19-Nov-2011
அல்தாஃபி பொதுக்கூட்ட வரவு செலவு கணக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக 13-11-11 ஞாயிற்று கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது. அப்பொதுக்கூட்டத்தின் வரவு செலவு கணக்கு விபரம்




