TNTJ Web TV

திருகுர்ஆன் அன்பளிப்பு

புதுமடம் கிளைக்கு விருது

முக நுாலில்

டுவிட்டர்

பிரபல பதிவு

கடந்த வாரம் அதிகம் படிக்கப்பட்ட பதிவுகள்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்



இமயம் டிவியில்..

இந்தியா 10.30 P.M - 11.00 P.M சவூதி அரேபியா 8.00 P.M – 8.30 P.M யூ.ஏ.இ. 9.00 P.M – 9.30 P.M

  • வெள்ளிமேடை பயான்கள்!
  • மாநாட்டு உரைகள்
  • இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி
  • இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகும்

Downlink details for Imayam TV

in Gulf: Satellite: IS 17 Position: 66 deg East Downlink Freq: 4015 MHz Symbol rate : 30.000 MSPS Fec:3/4 Polarisation:Vertical Signal:MPEG-4 Modulation: DVB-S2 /8PSK
in India: Statelite – Thaicom 5 Downlink Frequency – 3991 Symbol Rate – 13330 FEC – 3/4 Polarization – Vertical

மொத்த பதிவுகள்

பார்வையாளர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
22-Jun-2012

PostHeaderIcon அழைப்பு பணிக்கு உதவிடுவீர்....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை சார்பாக மர்க்கஸ் ஒன்று இயங்கி அதில் ஐந்து வேளை தொழுகையும் சிறப்பாக நடைபெற்று வருவது நாம் அரிந்த்ததே..
இந்த தவ்ஹீத் மர்க்கஸ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றைய தினம் வரை வாரந்தோரும் ஜும்மா பயான், உள்ளரங்கு நிகழ்ச்சிகளான வார பயான்கள், இஸ்லாம் ஓர் எழிய மார்க்கம் போன்ற நிகழ்ச்சிகள் இன்று வரை அல்லாஹ்வின் பேருதவியால் தடையில்லாமல், தொய்வில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. (அல்ஹம்துலில்லாஹ்)..

மேலும் இஸ்லாமியர்கள், மற்றும் மாற்று மதத்தவர்களுக்கான தெருமுனைக்கூட்டங்கள், வருடத்திற்க்கு ஒரு முறையாவது பெறிய அள்விலான பொதுக்கூட்டங்கள் போன்ற இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்ற வண்ணம் இருந்து வருகிறது.. 

ஆனால் தற்பொழுது காலச்சூழ்நிலையால் நம்முடைய தெருமுனைக்கூட்டங்கள் ஊருக்குள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய அமைப்பிற்கும் மட்டுமல்ல எந்த அமைபிற்க்கும் ஊருக்குள் தெருமுனை கூட்டங்களுக்கும் காவல்துறையினர் அனுமதி வழங்குவது கிடையாது. ஆண்டு விழா போன்ற விழாக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. நாமும் பல முறை உச்சிபுளி காவல் துறையினரிடமும், DSP யிடமும், பேசி பார்த்ததில் அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நம்முடைய (தெருமுனை) மார்க்க பிறச்சாரம் ஊருக்குள் குறிப்பாக பெண்களிடத்தில் மார்க்கம் செல்வது முற்றிலுமாக தடை பட்டு விட்டது. நம்முடைய இந்த மார்க்க கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் பேருந்து நிலையத்தோடு நின்று விடுகிரது. 

துண்டு பிரச்சுரங்கள் மூலமே ஓரளவு போய்க்கொண்டிரிக்கிறது. நாம் நமது மர்கஷ்சிற்க்குள் நடத்துகின்ற உள்ளரங்கு பயான் நிகழ்ச்சிகள் மட்டுமே ஊருக்குள் குரிப்பாக பெண்களுக்கு மார்க்கம் செல்லுகின்ற ஒரே வழியாகும். இதில் தடை என்னவென்றால் நம்மிடம் இருக்கின்ற குழாய் (ஸ்பீக்கர்) குறைந்த அளவு சப்த்தம் கொண்டதாக இருக்கிறது. இதன் காரணமாக உள்ளரங்கு நிகழ்ச்சியாக செய்யப்படும் பயான் நிகழ்ச்சிகலும் பேருந்து நிலையத்தை தாண்டி ஊருக்குள் செல்வதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நமது இஸ்லாமிய அழைப்பு பணி போய் கொண்டிருக்கிறது.

எனவே ஊருக்குள் மார்க்கம் எளிதாக தங்கு தடையின்றி செல்லவேண்டுமென்றால் நமது மர்கசிர்க்கு அதிக சப்த்தம் கொண்ட ஒளி பெருக்கி தேவைப்படிகிறது. இதை பெறவேண்டுமெறால் ரூபாய் 6000/- வரை செலவாகும்.. எனவே பெரு உள்ளம் கொண்ட உதவியாளர்களே இந்த அழைப்பு பணிக்கு தாங்களும் உதவும் வண்ணத்தில் இந்த தொகையே தந்து உதவுமாரு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் தாங்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களிடமும் விஷயத்தை எடுத்து சொல்லி தங்களால் இய்ன்ற தொகையே வசூலித்து தருமாரு கேட்ட்க் கொள்கின்றோம்.

மேலும் சில நாட்க்களுகு முன்னர் நமது மர்க்கசில் பழைய பேட்டரி பழுதடைந்த காரணத்தால் அதை விற்று விட்டு புதிய பேட்ட்ரி ஒன்று ரூபாய் 12400/- க்கு வாங்கப்பட்டுள்ளது. நமதூர் மின்சார நிலையே பார்த்தால் மிகவும் மோசமான நிலையிலேயெ உள்ளது, வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்க்கு கூட மின்சாரம் இருப்பது இல்லை எனவே மின்சாரம் இல்லாத சமயத்தில் பேட்டரி என்பது மர்கஸ்சிர்க்கு உயிர் நாடியாகவே உள்ளது. அதை கருத்தில் கொண்டு தான் இந்த சிரமத்திலும் பேட்டரி 12400 க்கு வாங்கப்படுள்ளது. எனவே இதர்க்கும் தங்களால் முடிந்த்த உதவியே செய்யுமாரு கேட்டுக்கொள்கிறோம்..

“அல்லாஹ்விற்க்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்காக பன் மடங்காக (அல்லாஹ்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான், தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்”

(அல் குர்ஆன் - 2:245)

“ஷைத்தான் வருமையேப்பற்றி உங்களை பயமுருத்துகிறான். வெட்க்க கேடானதை உங்களுக்கு தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும் அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாரளமானவன், அரிந்தவன்."

(அல் குர்ஆன் - 2:268)

"அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புங்கள்! எதன் மேல் உங்களை பொருப்பாளர்களாக அவன் ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (நல் வழியில்) செலவு செய்யுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டு (நல் வழியில்) செலவிடுவோருக்கு பெரிய கூலி உண்டு."

(அல் குர்ஆன் - 57:7)

இப்படிக்கு
கிளை செயலாளர்
(பகுருதீன் அலி)

மேலும் தொடர்புக்கு... 91 9042880817